8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.18) மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி