தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தொடர்ந்து ஒருசில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளை (ஜன.12) ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி