நீலகிரி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல், நாளை (வியாழக்கிழமை) மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.