தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஜூன்.12) 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. மேலும், இன்றைய (ஜூன்.10) தினம் திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.