தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று (மே 7) கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. கத்திரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தினமும் மதியத்திற்கு பிறகு மழை பெய்து வருகிறது.