சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, விமான போக்குவரத்து இன்று (பிப்.8) காலை முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூரு மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூரு மற்றும் திருப்பதிக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 10 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.