தமிழகத்தில் 12 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஜூன் 4) சென்னை உட்பட 12 முக்கிய இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், வேலூர், கடலூர், திருச்சி, திருத்தணி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இந்த கடும் வெப்பம் காரணமாக, பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியில் நடமாட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

தொடர்புடைய செய்தி