தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.