இன்றைய தலைமுறையினரிடம் தேவையின்றியும், அடிக்கடி மொபைல் போனைப் பார்க்கும் பழக்கமும் ஒரு தீவிரமான அடிமைத்தனமாக மாறி உடல்நலனைப் பாதித்து வருகிறது. இதனால் கண் எரிச்சல், தலைவலி, பார்வை குறைபாடு, மற்றும் கழுத்து-தோள்பட்டை வலி போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அதீத மொபைல் பயன்பாடு தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பைக் குறைப்பதால் கடுமையான தூக்கமின்மை குறைபாடும் ஏற்படுகிறது.