தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு.. நகைகள் பறிப்பு

கோவை மாவட்டத்தில் இருந்து கொச்சி செல்லும் புறவழிச் சாலையில் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு நகைகளை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவருந்த சென்றபோது தலைமைக் காவலர் பார்த்திபன் என்பவரை தாக்கிவிட்டு அவரது மனைவியின் நகைகளை அடையாளம் தெரியாத கும்பல் பறித்துச் சென்றது. தலையில் காயமடைந்த தலைமைக் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி