சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் வேலப்பன் நேற்று (மே.28) கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், தலைமைக் காவலர் வேலப்பன் இன்று (மே.29) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: நியூஸ்18