5 நாள்களுக்கு முன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அ.உ.அதியமான் மீண்டும் விசிகவில் இணைந்துள்ளார். சென்னையில் திருமாவளவன் முன்னிலையில் அவர் மீண்டும் இணைந்தார். கடலூரில் விசிக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த அதியமான், மண்டல செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். சேர்ந்த ஒரே வாரத்தில் கட்சி விட்டு விலகியதால், தவெக தரப்பில் செங்கோட்டையன் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.