"மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது"

மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என 'படையப்பா' பட வசனத்தை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான். இது தி இந்து நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி