லண்டனுக்கு ரீல்ஸ் கன்டென்ட்க்காக முதலமைச்சர் விஜய் போயிருக்கிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலை, கால் புரியாமல் செயல்படுகிறார் முதலமைச்சர் விஜய். ரீல்ஸ் எடுக்கவே அவர் லண்டன் சென்றிருக்கிறார். வீட்டில் இருந்து கிளம்பி திரும்பவும் வீட்டிற்கு வரும் வரை சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதாகதான் முதல்வர் விஜய் நினைக்கிறார். சினிமா மோகத்தில் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டார்கள் என்றார்.
நன்றி: சன்