தாராபுரம் வேட்பாளரான சத்தியபாமா குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார் என முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், பரப்புரை என்ற பெயரில், தீய சக்தியான திமுக சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி ஒப்புக்கொண்டிருக்கிறார் என சாடியுள்ளார்.