சென்னை நும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (33). இவர், அப்பகுதியில் உள்ள இந்தி டியூசனுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 39 வயதுடைய டீச்சருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பலமுறை தனிமையில் இருந்துள்ளார். பின்னர், 6 வயது மூத்தவர் எனக் கூறி டீச்சரை கழட்டிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து போலீசில் டீச்சர் புகார் அளித்த நிலையில், யோகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.