தொடர்ந்து 3 மாதங்களாக செல்போன் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த எண்ணை ஏர்டெல் (Airtel) நிறுவனம் 'Recycle' செய்து, புதிதாக எண் வாங்குபவர்களுக்கு அளிக்கும் அபாயம் உள்ளது. இப்படி புதிய எண்ணை பெறுபவர்கள், அந்த எண்ணுடன் இணைந்திருந்தவர்களின் ஃபேஸ்புக், ஊபர், ஸ்விக்கி போன்ற கணக்குகளில் தானாகவே Log-in செய்ய முடியும் என புகார் எழுந்துள்ளது. இது மட்டுமின்றி, ஆதார், யு.பி.ஐ. கணக்குகள் போன்ற முக்கிய தகவல்களும் திருடுபோகும் அபாயம் உள்ளதால், வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.