இந்த வங்கியில் லோன் வாங்கியிருக்கீங்களா?.. குறைந்த வட்டி கட்டினால் போதும்

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 விழுக்காடாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, SBI வங்கியில் கடன் வாங்கியவர்களது வட்டிவிகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இது, வீட்டுக் கடன், பெர்சனல், ரீட்டெயில் ஆகிய கடன்களுக்கும் அடங்கும். இந்த குறைந்த வட்டி வசூலானது இன்று முதல் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி