தவெக ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா? - டிடிவி தினகரன் சாடல்

ஒப்பந்தப் பணிகளை ஒதுக்க 20% கமிஷன் கேட்பதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் எழுந்துள்ள நிலையில், ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20% கமிஷன் பெறுவதற்காக ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், சிவகங்கை தவெக எம்எல்ஏ மீதான இந்தப் புகாரை அலட்சியப்படுத்திவிடாமல், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕