சமைத்த உணவை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உணவில் பாக்டீரியாக்கள் வளர்ந்து உணவு விஷமாதல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில உணவுகளை பலமுறை சூடு செய்வதால் அதன் தரம் மற்றும் சுவையும் மாறலாம். எனவே, அதிகமாக சமைக்காமல் தேவையான உணவை மட்டும் செய்து சூடாக சாப்பிடுவது நல்லது என்கின்றனர்.