ஜீன்ஸ், வின்னர் என பல ஹிட் படங்களில் நடித்து டாப்ஸ்டாராக வலம்வந்தவர் நடிகர் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான தித்திப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரீத்தி தியாகராஜன் நிறுவனம் தயாரித்து வழங்கும் பிரசாந்தின் 55வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஹரி - பிரசாந்த் 25 ஆண்டுகளுக்குப் பின் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2002ல் பிரசாந்தின் 'தமிழ்' படத்தை ஹரி இயக்கி இருந்தார்.