ஹர்திக் பாண்டியாவை வேறு அணிக்கு மாற்றுவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது. சீசன் முடிந்த பின் நடைபெறும் ஆய்வுக்குப் பிறகே தக்கவைப்பு அல்லது டிரேட் குறித்து முடிவெடுக்கப்படும் என்றது. ஹர்திக்கிற்குப் பதிலாகச் சென்னை அணியிடமிருந்து ஷிவம் துபே, ஆயுஷ் மஹாத்ரேவை பெற மும்பை முயல்வதாகப் பரவிய வதந்திக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.