மனைவியை பிரிந்துவிட்டதாக ஹர்திக் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, தனது மனைவியை பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செர்பியாவை சேர்ந்த நடாஷா என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஹர்திக், தனது விவகாரத்து முடிவு தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நானும் நடாஷாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் தங்களது தனியுரிமையை மதித்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

தொடர்புடைய செய்தி