தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னை காவல்துறை இந்த வழக்கின் முக்கியக் கோப்புகள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்கவும், இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி முடிவு செய்துள்ளனர்.