பிரபாஸுடன் நடித்தது மகிழ்ச்சி: ரித்தி குமார் நெகிழ்ச்சி

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' திரைப்படம் வரும் ஜன.9 தேதி வெளியாகிறது. மாருதி இயக்கிய இந்த படத்தில் ரித்தி குமார், நிதி அகர்வால் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நேற்று (டிச.27) நடைபெற்ற பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரித்தி குமார், 'பிரபாஸுடன் ஒரு படம் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 3 வருடங்களுக்கு முன்னாடி அவர் எனக்கு பரிசளித்த சேலையைதான் இப்போது இங்கு அணிந்து வந்திருக்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி