சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி: தமிழ்நாடு அரசு சிறப்புப் பேருந்துகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை நவ.16 முதல் இயக்க தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய நகரங்களிலிருந்து பம்பைக்கு இயக்கப்படுகின்றன. மேலும், நவ.28 முதல் ஜன.16 வரை ஓசூர், சேலம், கரூர் போன்ற பகுதிகளிலிருந்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி