திருப்பதியில் கோலாகலமாக நடந்த அனுமன் ஜெயந்தி: பக்தர்கள் பரவசம்

திருமலை திருப்பதி மலைப்பாதையின் 7-வது மைல் பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்த நிலையில், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனுடன் திருப்பதி கோதண்டராமர் மற்றும் கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளிட்ட தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பல்வேறு உள்ளூர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் சிறப்பாக நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி