பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (பிப்., 17) மதியம் வெளியிடப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78,545 மாணவர்கள், 4 லட்சத்து 24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 21,057 பேர் எழுதவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி