'குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு'

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ஆம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்வை எழுதவுள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், ‘www.tnpsc.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப என் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி