பாதி எரிந்த நிலையில் இளைஞரின் உடல் மீட்பு.. கதறும் மனைவி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த இளைஞரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். தொட்டியம்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. கோபிநாத்தின் மனைவி பிரியாவுக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துவிட்டு சடலத்தை அவசரமாக எரித்துள்ளனர். இதில் சந்தேகம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீயில் எரிந்த இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி