6-ம் வகுப்பு மாணவனை சுத்தியலால் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர்

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை, உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாணவனின் கை எலும்பு முறிந்து, ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாணவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்பயிற்சி ஆசிரியர் நவீன் ஜூட் கோனேவை (45) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி