சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடிப்பில் உருவாகி வரும் 'பாரிஸ் கஃபே' படத்தின் “அழகழகாய் மனம்” என்ற புதிய பாடலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். நடுத்தர வயது காதலை மையமாக கொண்டு கண்மணி ரங்கநாதன் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'ஜோக்கர்', 'ஜெய்பீம்' போன்ற படங்களில் நடித்து முத்திரை பதித்த குரு சோமசுந்தரம், இக்காணொளி பாடலின் வெளியீட்டின் மூலம் தற்போது அனைவரின் கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளார்.