ஐபிஎல் தொடரில் இன்று (மே 16) கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி களம் காண்கிறது. இதனால், முதலில் பேட்டிங் செய்யவுள்ள கொல்கத்தா அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டி, இலக்கை எளிதாக வெற்றியை தன்வசப்படுத்த குஜராத் அணி தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.