ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 1 சுற்றில் இன்று (மே 26) குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இன்று வெற்றி பெறும் அணி வெள்ளிக்கிழமை நடக்கும் குவாலிபயர் 2 போட்டிக்கு முன்னேறும்.