குஜராத்தின் மர்ம கிணறு! 5 நாள்கள் தளும்பிக்கொண்டே இருந்த பின்னணி!

குஜராத் மோர்பி மாவட்டம் விர்பர்தா கிராமத்தில் உள்ள பண்ணைக் கிணற்றில், தொடர்ந்து தண்ணீர் தளும்பி வெளியேறிய சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாறை இடுக்குகளில் ஏற்பட்ட காற்று மற்றும் நீர் அழுத்தமே இதற்குக் காரணம் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். நில அதிர்வு அச்சம் தேவையில்லை எனக் கூறியுள்ள நிர்வாகம், இது குறித்துத் துறை சார்ந்த ஆய்விற்கும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕