இந்தியா தனது முதல் தேசிய, சான்றுகளின் அடிப்படையிலான நுரையீரல் புற்றுநோய் பராமரிப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. “நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை மற்றும் தணிப்பு: சான்றுகள் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில் அது வெளியாகியுள்ளது. இதில் நோயறிதல், சிகிச்சை மற்றும் தணிப்புப் பராமரிப்பை உள்ளடக்கிய 15 முக்கிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.