தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு எவ்விதமான உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முறையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி வடமாடு, மஞ்சுவிரட்டு மற்றும் எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
நன்றி:News18Tamil