ஜிஎஸ்டி வரி எதிர்ப்பு: தமிழகத்தின் பல பகுதிகளில் கடையடைப்பு

வணிக பயன்பாட்டு கட்டிட வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு, சேலம், மதுரை மற்றும் தேனி மாவட்ட நகர் பகுதியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து, வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி