பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற விவசாயிக்கு ரூ.1.69 கோடி ஜிஎஸ்டி அபராதம் செலுத்தக் கோரி வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த அவர், தனது ஆண்டு வருமானமே ரூ.75 ஆயிரம்தான் என்றும், இவ்வளவு பெரிய தொகையை எவ்வாறு செலுத்த முடியும் என்றும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆதார் மற்றும் வங்கி ஆவணங்களை யாரோ தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.