தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூலை 12) நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். இந்நிலையில், மதுரையில் குரூப்-4 வினாத்தாள்கள் தனியார் பேருந்தில் A4 தாள் ஒட்டி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து, குரூப்-4 வினாத்தாள் கசியவில்லை. தேர்வர்கள் யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிராபகர் விளக்கமளித்துள்ளார்.