குரூப் - 1 தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். சப்-கலெக்டர், டிஎஸ்பி, வணிக வரி உதவி கமிஷனர் உள்ளிட்ட 72 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு இன்று (ஜூன் 15) காலை தொடங்கி நடந்துவருகிறது. இதனிடையே சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் ஆய்வு செய்த பின் பேசிய எஸ்.கே.பிரபாகர், இந்தத் தேர்வின் முடிவுகள் 2 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வு 3 மாதங்களில் நடக்கும் என்றார்.
நன்றி: SUN