திருமணத்தின் போது வரதட்சணையாக மஹிந்திரா ஸ்கார்பியோ கார் கேட்டு மணமகன் அடம்பிடித்துள்ளார். கார் தர இயலாது என மணப்பெண் வீட்டார் கூறியதால், திருமண மேடையிலிருந்து விவசாய நிலங்கள் வழியாக மணமகன் தப்பியோடினார். ஆத்திரமடைந்த உறவினர்கள் அவரை 40 நிமிடங்களாக வயல்வெளிகளில் துரத்திப் பிடித்தனர். வரதட்சணை கேட்டவரைத் திருமணம் செய்ய மாட்டேன் என மணப்பெண் திருமணத்தை ரத்து செய்த நிலையில், போலீசார் மணமகனைக் கைது செய்தனர்.