பாகிஸ்தான் சந்தையில் கையெறி குண்டு தாக்குதல்: 3 பேர் பலி

பாகிஸ்தானின் சுவாபி மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதியில் பயங்கர கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், பாகிஸ்தான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி