சீனாவில் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் கேட்ட பாட்டி

சீனாவின் ஷாங்காய் நகரில் பேத்தியை 15 ஆண்டுகள் வளர்த்ததற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்ட பாட்டி தொடர்ந்த வழக்கு கவனம் பெற்றுள்ளது. சூ என்ற 60 வயதுக்கு மேற்பட்ட பெண், தனது மகன் அவரது மனைவியை விவாகரத்து செய்த பிறகு, 4 வயதான பேத்தியின் உணவு, உடை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளை ஏற்றதாக கூறப்படுகிறது. மகன் மறுமணம் செய்து தனியாக சென்ற நிலையில், பேத்தி தொடர்ந்து பாட்டியின் பராமரிப்பிலேயே வளர்ந்துள்ளார். இதற்காக 3.6 லட்சம் யுவான், அதாவது சுமார் ரூ.45 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕