அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3வது கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதில், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீன்பிடி தடைகால நிவாரண தொகை ரூ.8000லிருந்து ரூ.12,000 உயர்த்தி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட் ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறியுள்ளார்.