அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் மற்றும் அவசரகால பொத்தான்கள் பொருத்தம்

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவில் GPS கருவிகள் மற்றும் அவசரகால அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட உள்ளன. ஆபத்து காலங்களில் இந்த பொத்தானை அழுத்தினால், உடனடியாக காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் சென்று சேரும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்கள் மற்றும் அவசர நேரங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி