தவெகவிற்கு ஆளுநர் அவகாசம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பதவியேற்புக்கு முன்பே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆளுநரின் நிர்பந்தம் தேவையற்றது என்று இந்திய கம்யூனிஸட் கட்சி தெரிவித்துள்ளது. தனிப் பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சியமைக்க அழைப்பதில் உள்ள சிக்கல் என்ன? என்று ஆளுநருக்கு சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கேள்வியெழுப்பியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தை ஆளுநர் மதிக்க வேண்டும் என்றும் தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி