கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அரசு வேலை உத்தரவு ரத்து

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் 31 குடும்பத்தினருக்கு அரசு வேலைக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. சென்னை வழக்கறிஞர் என்.பிரபாகரன் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த நடவடிக்கை சட்ட நடைமுறைகளுக்கும் உரிய விதிமுறைகளுக்கும் புறம்பானது என சுட்டிக்காட்டியுள்ளது. இதையடுத்து, உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் முதலமைச்சர் விஜய்யால் வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவுகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது.

தொடர்புடைய செய்தி