அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், அனைத்து தேர்வு முகமைகளின் ஆண்டு தேர்வுத் திட்டம் வெளியிடப்படும். பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். சேவை உரிமைச் சட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் வருவாய்த்துறை, வனத்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவுத்துறை, காவல்துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும்.