கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. உமேஷ் மேட்டியின் மருமகளும், மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ராஜ்குமாரின் மகளுமான டாக்டர் அங்கிதா, அரசு 'நம்ம கிளினிக்'கில் பணிபுரியாமல் முழுநேர எம்.டி. மாணவியாகப் படித்துக் கொண்டே மாதம் ரூ.75,000 சம்பளம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி கிளினிக் பூட்டப்பட்டு பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது அவரது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.